KOLNews

அட.. சும்மா கவலைப்படாதீங்க..!

எந்த சிக்கலுக்கும் இவரிடம் தீர்வு உண்டு என அவ்வூர் மக்கள் நினைக்கும் வகையில், அந்த கிராமத்தில் ஞானி ஒருவர் இருந்தார்.

இருப்பினும், அதில் ஒரு சிலர் எப்பவுமே தங்களுக்கு பிரச்சனை இருப்பதாக வரும் போதெல்லாம், ஏற்கனவே கூறிய பிரச்சனை தொடர்பாகவே மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர்.

What kind of meditation is this? | Top Stories

இதை கவனித்த ஞானி,  ஒரு நாள் அவர் அவர்களிடம்  நகைச்சுவை ஒன்றை சொன்னார், அதை கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து ஆர்ப்பரித்து சிரித்தனர்.

Top 10 Laughter Therapy Exercises - YourDOST Blog

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, அவர் அவர்களிடம் அதே நகைச்சுவையைச் சொன்னார், ஆனால் இப்பொது அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சிரித்தனர்.

மீண்டும் அதே நகைச்சுவையை மூன்றாவது முறையாக அவர் சொன்னபோது யாரும் சிரிக்கவில்லை.

அப்போது ஞானி சொன்னார்..

 “ஒரே நகைச்சுவைக்காக  நீங்கள் மீண்டும் மீண்டும் சிரிக்க முடியாது. பின் ஏன் ஒரே பிரச்சினை நினைத்து எப்போதும் வருத்தப்படுகிறீர்கள்'. 

மக்களுக்கு ஏதோ புரிந்தது போல் .தோன்றியது.

கதையின் நீதி - 

கவலைப்படுவது உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது, இது உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும்.

English Summary

Just .. Don't worry ..!

Latest Articles

KOLNews