KOLNews

நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா.! - .வெறும் இடமாற்ற பிரச்சனையா இது..?

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாயிருந்த  தஹில் ரமணி தான் மேகாலயாவுக்கு மாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் ராஜினாமா செய்து விட்டார்.

வழக்கமான சாதாரண இடமாற்றமா இது என்றால்..இல்லை என இவரின் பின்னணி கூறுகிறது.

தற்போது பிரதமராக உள்ள மோடி குஜராத் முதல்வராக இருந்த போது மாநில காவல் அதிகாரியாக இருந்த பாக்ரா என்பவர் IPS தகுதிக்குபோது உயர்த்தப்படுகிறார்.

அவர் தான் தகாத் நகர துணை கமிஷனர். அதாவது கோத்ரா ரயில் எரிப்பில் நடந்த இஸ்லாமியர் படுகொலைக்குப் பிந்தைய கலவரத்தை களத்தில் நின்று தடுக்க வேண்டிய காவல் அதிகாரி பாக்ரா....

ஆனால் அவரும்  அவரோடு சேர்ந்த காவலர்களும் பரிவாரங்களோடு சேர்ந்து பல்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தில் 7 பேரைக் கொலை செய்ததோடு, அப்பெண்ணை பிணங்களுக்கு ஊடாகப் போட்டு மாறி மாறி கற்பழித்தனர்...

அதையடுத்து குஜராத் விசாரணை நீதிமன்றம் நடத்திய விசாரணையின் படி காவல் அதிகாரி பாக்ராவும் மற்றவர்களும் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுகிறார்கள்.

அதன் பின் குஜராத் உயர்நீதி மன்றத்தில் செய்யப்பட்ட முறையீடும் அதே திசையில் விசாரணையைத் துவக்க,பயந்து போன பல்கிஸ் பானு,உச்சநீதிமன்றத்தை நாடினார்....

உச்சநீதிமன்றம், வழக்கை மோடி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது...

இந்த நிலையில் தான் இந்த வழக்கு நீதிபதி தஹில் ரமணியிடம் வருகிறது.

அவர் துரிதமாகவும் நேர்மையான முறையிலும் விசாரணை மேற்கொண்டு இறுதியில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறார்.

சம்பத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்கில் சேர்த்தார்.

தடயங்களை அழிக்க காவல் அதிகாரிகளுக்குத் துணை போன இரண்டு மருத்துவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது 

அதையடுத்து, ஓய்வு பெறுவதற்கு முன்பு, மோசடியால் IPS பதவி உயர்வு பெற்ற பாக்ரா டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் 

"கற்பழிக்கப்பட்ட பல்கிஸ் பானுவுக்கு குஜராத் அரசு 50 லட்சம் வழங்க வேண்டும்" என நீதிபதி தஹில் ரமணிஉத்தரவிடுகிறார்.

மேலும், உடனடியாக அரசுப் பணி வழங்கவும் ஆணையிடுகிறார்.

இந்த பின்னணியை புரிந்துகொண்டு,  தற்போது நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முயற்சித்ததை பற்றி யோசிக்க வேண்டியதாக உள்ளது.

75 பேருக்கு தலைமை நீதிபதியாக இருப்பவரை... இரண்டே நீதிபதிகள் கொண்ட மேகாலயாவிற்கு மாற்றி உத்தரவு வருகிறது உச்சநீதிமன்ற கொலிஜியத்திடமிருந்து...

இத்தனைக்கும் ரமணிதான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிலேயே சீனியர்...

2020 ஓய்வு பெற வேண்டியவர், இப்போதே வெளியேறுகிறார்....நஷ்டம் அவருக்கல்ல ..

English Summary

Justice Tahil Ramani resigns -. Just a relocation problem?

Latest Articles

KOLNews