KOLNews

பஞ்சமி திதிகளில் செய்யுங்கள் 'ஜோதி' வழிபாடு.!

வழிபாடு என்பது ஒவ்வொரு மனிதனும், அவனது இறை நம்பிக்கைக்கு ஏற்றவாறு, அவனது தனிப்பட்ட சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தெய்வத்திடம் முன்வைத்து, அதிலிருந்து மீள்வது என்கிற புரிதலே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் சமூகத்திற்காகவும் நீங்கள் வழிபடலாம். நீங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற முறையில் செய்யப்படும் வழிபாடு பலனை அளிக்காமல் போகாது. 

அப்படி பிரத்யேமாக செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பஞ்சமி திதிகளில் செய்யப்படும் ஜோதி வழிபாடு.

Image result for lord ambigai

அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள், இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. 'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும். 

தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஒரு தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால், அது நிச்சயம் நிறைவேறும். இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போது. 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

இப்படி செய்தால் அம்பிகையின் அருளால் வேண்டுதல் நிறைவேறும்..

English Summary

'Jyoti' worship in Panchami Tithi!

Latest Articles

KOLNews