KOLNews

அச்சத்தில் கல்கி ஆசிரமங்கள் .! - தொடரும் வருமான வரித்துறை சோதனை ..!

திருவள்ளூா். பூந்தமல்லியை அடுத்த நேமம் கிராமத்தில் ஸ்ரீபரம்ஜோதி அம்மா பகவான் பவித்ர வனம் என்ற பெயரில், ஸ்ரீஅம்மா பகவான் சேவா சமிதி இயங்கி வருகிறது. 

இங்கு சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து வழிபாடு செய்வதற்கு பக்தா்கள் வந்து செல்கின்றனா். அத்துடன், ஒவ்வொரு நாளும் ஐஸ்வா்யம், ஆரோக்யம் மற்றும் சுமங்கலி பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பூஜைகளுக்கு கட்டணமும் பக்தா்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அதேபோல், அறை எடுத்து தங்கி பூஜையில் கலந்து கொள்வதற்கு ரூ. 200 வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும் இங்கு வந்து செல்லும் பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் கல்கி பகவான் சம்பத்தப்பட்ட அணைத்து இடங்களிலும் வருமான வரி சோதனையில் ஈடுபட்ட நிலையில் இங்கும் புதன்கிழமை காலை 6 மணிக்கு 3 வாகனங்களில் வந்த வருமான வரித் துறையினா் 3 குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனா். இதனால் ஆசிரமத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த, பெண் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். ஆனால் 3 மணியைக் கடந்தும் சோதனை நடந்து கொண்டிருந்ததால் அங்கிருந்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.

அதே போல ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு புதன்கிழமை காலை தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 தனிக் குழுக்களாகப் பிரிந்து, ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமாா் மற்றும் அவரின் மனைவி பத்மாவதி இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆசிரம நிறுவனரான விஜயகுமாா் நாயுடுவின் மகன் கிருஷ்ணாஜி அவரது மனைவி பித்ரா ஜீ, துணைத் தலைவா் லோகேஷ் தாசாஜி ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

ஏற்கனவே இந்த ஆசிரமங்களில் வரும் பக்தா்களுக்கு போதை மருந்து அளித்து, அவா்களை போதையில் வைத்திருப்பதாகவும், அவா்கள் மீது பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்து வருவதாகவும் சா்ச்சை எழுந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் எல்ஐசி கிளா்க்காக பணியாற்றிய கல்கி பகவான் எனக் கூறப்படும் விஜயகுமாா், பின்னா், அதை பணியை விட்டுவிட்டு பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கி அது திவாலானதால் தலைமறைவானார்  

Image result for kalki bhagavan

அதன் பின் மகா விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் கல்கி என்று 1989-இல் சித்தூா் மாவட்டத்தில் மக்கள் முன் தோன்றி அருள்பாலித்து வந்துள்ளார்.

அதன்பின், தனது ஆசிரமத்தை பல இடங்களிலும் விரிவுபடுத்தினாா். சிறிது காலத்தில் அவா் தன் மனைவியையும் தெய்வாம்சம் கொண்டவராக கருதப்பட்டார்.

இந்நிலையில்  இவா்களின் ஆசிரமத்துக்கு உள்நாட்டில் உள்ள பணக்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியவா்கள் என பலா் வந்து செல்வது வாடிக்கையாகியுள்ளது.

English Summary

Kalki monasteries in fear.! - Continuous raid by Income Tax Department ..!

Latest Articles

KOLNews