KOLNews

மவுசு குறையாத காங்கேயம் மாடுகள் – சந்தையில் கடும் கிராக்கி

காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ 23 லட்சத்துக்கு விற்பனையானது.

 காங்கயம் தாலூகா நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடந்து வருகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் 114 மாடுகளை  கொண்டு வந்தனர்.

Image result for kangayam cow

இதில் காங்கயம் இன மாடுகள் ரு15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ₹72,500 வரை விற்றது. பசுங்கன்றுகள் ₹20 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை விற்பனையானது. காளை கன்றுகள் ₹12 ஆயிரம் முதல் ₹30ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்றைய சந்தையில் 50 கால்நடைகள் ₹23லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

English Summary

Kangayam cows - heavy demand in the market

Latest Articles

KOLNews