KOLNews

கார் விபத்தில் உயிர் தப்பினார் குஷ்பூ ..!

பா.ஜ.க. சார்பில் நேற்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரைக்கு கலந்துகொள்வதற்காக சென்ற நடிகை குஷ்பு சென்ற போது விபத்துக்கு உள்ளானது. 

நேற்று காலை 9¼ மணியளவில், மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் என்ற இடத்தில் செல்லும் போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை குஷ்பு சென்ற கார் முந்தி செல்ல முயல்கையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குஷ்புவுடன் கட்சி நிர்வாகிகள் சிலரும் உடன் பயணித்துள்ளனர்.

விபத்தில் குஷ்புவின் கார் கதவு சேதம் அடைந்தாலும்,  குஷ்பு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன் பின்,  குஷ்பு மற்றும் காரில் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றொரு கார் மூலம் கடலூருக்கு சென்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக  நடிகை குஷ்புவின் கார் டிரைவர் முருகன் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தார். அத்துடன் கன்டெய்னர் லாரி டிரைவரான 54 வயதுடைய அப்துல் அக்கிளையும், குஷ்புவின் கார் டிரைவரான முருகனையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English Summary

Khushboo survives in car accident

Latest Articles

KOLNews