KOLNews

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி..! - சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையாம்..!

புதுடெல்லி  உலக அணுசக்தி தொழில் அமைப்பு (WNISR) . இது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அணு உலைகள், அணு ஆராய்ச்சி, அணு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கண்காணித்து வரும் ஒரு அமைப்பு.

மைக்கேல் ஸ்னைடர் எனப்படும் தனியார் அணுசக்திக் கொள்கை ஆய்வாளர் குழுவால் ஆண்டுதோறும் அணு உற்பத்தி நிறுவனங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில், 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் , தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் முறையாக செயல்படவில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது 

அந்த அறிக்கையின் படி, 

கூடங்குளம் அணுமின் உற்பத்தி ஆலையில் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. ஏனெனில், இந்த அணு உலை இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என முன்னெடுக்கப்பட்ட  போராட்டங்களினால் பல நாட்கள் அணு உலை இயங்காமல் இருந்து வந்துள்ளது. மேலும், சில தொழில்நுட்ப காரணங்களால் ஆலை சரிவர இயங்கவில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகளின் செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளது.

உதிரி பாகங்கள் உடைந்தது, இன்ன பிற பழுதுகள் காரணமாக உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.

முதல் அலகானது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 54 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது அலகு ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் 35.2 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. மேலும் , கூடங்குளத்தில் 2 அலகுகள் உள்ளபோது 2018ல் ஒரு நேரத்தில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் கூடங்குளம் அணு உலையில், மின் உற்பத்தி மேலும் குறையக்கூடும் எனவும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலையில் மாற்று சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

English Summary

Kudankulam Nuclear Power Plant - Not enough to say ..!

Latest Articles

KOLNews