KOLNews

சாதி துவேஷத்தை கக்கிய மீரா மிதுன்..! - நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் புகார்

பிரபலங்களை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குபவர் நடிகை மீரா மிதுன், ஏற்கனவே இவர் மீது சில ஸ்டார் நடிககர்களின் ரசிகர்கள் ஏக கடுப்பில் இருக்கும் நிலையில், அண்மையில் சாதியரீதியாக திரை இயக்குனர்களை குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார் . 

அதில் பட்டியலின சினிமா இயக்குநர்கள் குறித்தும் , அவர்களின சாதி குறித்தும் மிக அவதூறாக பேசினார். இந்நிலையில்,  இந்த வீடியோ சமூக பதற்றத்தை உண்டாக்கும் விதமாக உள்ளதால் , மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் , திராவிடர விடுதலை கழகத்தின் சார்பில் , அதன் மாவட்டச் செயலாளர் திரு . மணி அமுதன் , மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

சாதிய துவேஷத்துடன் நடிகை மீரா மிதுன் பேசிய ஆடியோ வந்த நிலையிலேயே இதற்கான எதிர்வினையை முன்னெடுத்திருக்க வேண்டும்,ஆனால் சில நாட்கள் கழித்தே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஊடக வெளிச்சத்திற்காக செய்யும் அற்பத்தனமான விஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என பல அமைப்பு கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

English Summary

Meera Mithun spewed caste hatred ..! - Complain to the Commissioner of Police seeking action

Latest Articles

KOLNews