KOLNews

நாக தோஷமா..? - இங்கு சென்று வழிபடுங்கள்

நாக தோஷத்தை ஒரு பெரும் தடையாக பார்க்கும் மக்கள் அநேகம் உள்ளனர். இதனால் ஜாதகத்தில் இந்த தோஷமிருப்பதாக நினைப்பவர்கள், தங்களின் மன உறுத்தல்களில் இருந்து விடுபட அதற்குண்டான வழிபாட்டுத்தலங்களில் பிராத்தனைகளை மேற்கொள்வது உசிதம் என பெரியோர்கள் சொல்லுவார்கள். 

அந்த வகையில், நாக தோஷம் உள்ளவர்கள் சென்று வழிபடும் இரண்டு திருத்தலங்களை பார்க்கலாம்.

பிரத்யங்கரா அம்மன் கோயில் , சோளிங்கநல்லூர் 

Sri Maha Pratyangira Devi Puja at Sholinganallur Temple

சென்னையில் சோளிங்கநல்லூர் என்ற பகுதியில் அமைந்து  இருக்கும் பிரத்யங்கரா அம்மன் கோயில் , சக்திவாய்ந்த கோயில்களில் ஒன்று. பிரத்யங்கரா அம்மனுக்கு என்றே தனிக்கோயில் உள்ள இடம் இது .  பக்தர்கள் தங்களின்  நாகதோஷம் நீங்கவும் , எதிரிகள் தொல்லைகள் நீங்கவும் , இந்தக்கோயிலுக்கு வந்து விசேஷ பூஜைகள் செய்து செல்கின்றனர் . இந்தக்கோயில் , அடையாறிலிருந்து சுமார் . 20 கி.மீ தொலைவில் உள்ளது . 

Nagaraja Swami Temple : Nagaraja Swami Nagaraja Swami Temple Details |  Nagaraja Swami- Nagercoil | Tamilnadu Temple | நாகராஜசுவாமி

அதே போல  நாகர் கோயில் நாகர் கோயிலில் இருக்கும் நாகர் சன்னதி பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது . நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அதற்குரிய பரிகாரம் செய்து பயனடைந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது . இந்தக் கோயில் நாகர் கோயிலில் , வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது . நாகர் கோயில் என்ற ஊர் சென்னையில் இருந்து சுமார் 570 கி.மீ. தொலைவில் உள்ளது . 

English Summary

NAGU DHOSH ..? - Go here and worship

Latest Articles

KOLNews