KOLNews

நாளை அரசு பேருந்துகள் ஓடாது..! - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த  வகையில், இது தொடர்பாக பிரதமர் மோடி மார்ச் 20 ஆம் தேதி அன்று தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அப்போது மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று  தெரிவித்ததுடன், 22-ந் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Image result for buses in koyambedu depot

அதைத்தொடர்ந்து நேற்று, முதலமைச்சர் பழனிசாமியும் வரும் 22-ம்தேதி (நாளை) சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

22-ம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் எதுவும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது.

மெட்ரோ ரெயில்களும் வரும் 22-ம் தேதி இயங்காது.

மிகவும் அத்தியாவசிய பணிகளைத்தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.வதந்திகளை நம்ப வேண்டாம், பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.

அனைத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31-ம் தேதி வரை மூடப்படும்.நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கொரோனாவை ஒழிக்க வேண்டும்.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

No buses to run tomorrow - CM Announcement

Latest Articles

KOLNews