KOLNews

இனி.. அவஸ்தை வேண்டாம் .! - கழிப்பறையுடன் அரசு விரைவு பஸ்கள்..! தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர், ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட 500 பேருந்துகளை தமிழக போக்குவரத்துறைக்கு வழங்கினார்  

முன்னதாக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக  ரூ.154 கோடி செலவில் 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன . இந்நிலையில் இந்த பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவற்றின் வடிவமைப்புகளை பஸ்சுக்குள் ஏறிச் சென்றும் பார்வையிட்டார்.

இவற்றில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பஸ்களும், அரசு போக்குவரத்து கழகத்துக்கு 147 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  பஸ்களில் கழிப்பறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, பஸ் பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி வசதி உள்ளது.

மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக, அவர்கள்  கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி உள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

English Summary

No more trouble ..! - Government quick buses with toilet ..! The Chief Minister of Tamil Nadu started

Latest Articles

KOLNews