KOLNews

முககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .! - அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை, சென்னையில் உள்ள மீன் சந்தைகளில்  முறையாகக் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க உள்ளதாக மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முககவசம் இல்லாமல் மீன் மார்க்கெட் உள்ளே யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று மீனவ பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக சென்னையில் இறைச்சிக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சென்னையில் மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில், மீன் வியாபாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள், மீன் ஏற்றுமதியாளர்கள், மீனவர் சங்கத்தினர் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

 பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 

சென்னையில் கொரோனா நோய் கட்டுக்குள் இருக்கிறது. பொதுமக்களுக்கு புரத சத்து கிடைக்கும் வகையிலும், நோய் தொற்று ஏற்படாதவாறு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், ஊரடங்கு தளர்வில் மீன் மார்க்கெட்டுகள் இயங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதையடுத்து, சென்னையில் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, நெற்குன்றம், திருவொற்றியூர் உள்ளிட்ட 9 பிரதான மீன் மார்க்கெட்டுகளில், பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மீன் வாங்குபவர்கள் நிற்கும் வகையில் வட்டம் போடவேண்டும். பொதுமக்கள் உள்ளே வருவதற்கு ஒரு வழியும், வெளியே செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்த வேண்டும். அதில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன்,  நுழைவாயிலில், கைகளை சுத்தம் செய்யும் வகையில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது .காசிமேடு மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள், சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதியில்லை. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீன் அழுகக் கூடிய பொருள் என்பதால் அதைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ–பாஸ் பெறத் தேவையில்லை 

என கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

English Summary

No one is allowed in the fish market without face mask .! - Minister Jayakumar

Latest Articles

KOLNews