KOLNews

கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்..! - அத்திவரதரை தரிசிக்க சென்றவருக்கு அழகான ஆண் குழந்தை..!

காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு பின் தண்ணீரிலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலி த்துவருவது தெரிந்ததே.. 

பிரபல ரௌடிக்கு ஜனாதிபதிக்கு நிகராக மரியாதை செய்து தரிசனம் காண செய்தது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள், பக்தர்களை மின்சாரம் தாக்கியது, காவல் துறை அதிகாரியை ஐஏஎஸ் அதிகாரி வசை பாடியது என  ஏதோ ஒரு வகையில் செய்தியில் பரபரப்பாக அடிபடும் வைபவமாக இந்த அத்திவரதர் தரிசனம் நடை பெற்றுவருகிறது.

அந்த வகையில், இன்று அத்திவரதர் கோயில் வளாகத்தில் விஜய என்கிற நிறைமாத கர்ப்பிணி பெண் அருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக கடந்த ஜூலை 31 நாட்களாக சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வரும் நிலையில், 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்தவாரு பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். 

Image result for born male baby indiaதரிசனம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் காஞ்சியில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.அதையடுத்து கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டார். 

அதன் பின், அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடைபெற்று 3 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

English Summary

Normal Delivery for pregnant woman..! Beautiful baby boy at Athivarathar Dharshan ..!

Latest Articles

KOLNews