KOLNews

சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்..! - காலத்தினால் செய்த உதவி

கொரானா தோற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு தமிழக சிறைகளில் உள்ள கைதிகளும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். 

அவர்கள் மூலம் கடந்த 10 நாள்களில் ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்ட்டுள்ளன.

கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு என் 95 முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது.

How To Choose an N95 Respirator Mask For Coronavirus Prevention ...

மேலும் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளதால்,  தமிழகத்தில் என் 95 முகக்கவசங்களுக்கும், கிருமி நாசினிக்கும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.இதையடுத்து அதற்கான தட்டுபாடும் அதிகரித்துள்ளது.

இதனை சீராக்க சுகாதாரத்துறையும்,சிறைத்துறையும் இணைந்து கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிப்பதற்கு திட்டமிட்டது. 

அதனையடுத்து ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் துணி தைக்கும் தொழிலகம் இருப்பதினால், அதன் மூலம் முகக்கவசம் தயாரிக்க சிறைத்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், என் 95 முகக் கவசம் தயாரிப்பதற்குரிய மூலப் பொருள்கள் கிடைப்பது சிக்கலாக இருப்பதால், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய மூன்றடுக்கு முகக்கவசங்களை தயாரிக்க சிறைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 21-ஆம் தேதி முதல் அனைத்து மத்திய சிறைகளிலும் முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது. ஆனால் மூலப் பொருள்கள் தாராளமாக கிடைக்காததினால், முகக்கவசங்களை தயாரிப்பதில் வேகம் காட்ட இயலாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், புழல் மத்திய சிறையில் இந்த தயாரிப்புப் பணியில் 32 கைதிகள் ஈடுபட்டதால், கடந்த 10 நாள்களில் 1.50 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் கைதிகள் 35 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்துள்ளனா். இதில் 75 சதவீத முகக்கவசங்கள் காவல்துறைக்கு வழங்கப்படுவதாகவும், மீதி சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சிறைத்துறையினா் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தேவையை பொருத்து தொடர்ந்து முகக்கவசங்களைத் தயாரிக்க உள்ளதாகவும், இவற்றை பொதுமக்களுக்கும் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிறைத் துறையினா் தரப்பில் சொல்லப்படுகிறது.

English Summary

One and a half million facets made by prisoners - Timing Help

Latest Articles

KOLNews