விருதுகள் பல பெற்ற, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
நேற்று, 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. அதில், தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், " பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது, இனி அது மானுட சமூகத்தின் பிரதி, யாவருக்கும் நன்றி ..!", என தெரிவித்துள்ளார்.
English Summary
‘Pariyerum Perumal’ in Group 1 exam question paper ..!