KOLNews

பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாறுதல்: புதிய மென்பொருள் விரிவாக்கத் திட்டம் தொடங்கியது..!

பத்திர பதிவு முடிந்தவுடன் கணினி மூலம் பட்டா மாறுதலுக்கான படிவங்களை மாற்றம் செய்யும் மென்பொருள் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

முன்னதாக இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் கடந்த புதன்கிழமை (ஆக.14) நடைபெற்ற நிலையில், இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..

பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை முற்றிலும் கணினிமயமாக்கும் ஸ்டார் 2.0 மென்பொருள் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப் பகுதிகளில் ஆவணப் பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்குத் தேவையான படிவங்கள் கணினி மூலமாகவே வருவாய்த் துறைக்கு அனுப்பப்படுகின்றன.

இப்போது இந்த வசதியை நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் அங்கு ஆவணப் பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் ஸ்டார் 2.0 மென்பொருள் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதன்மூலம், நகர்ப்புறப் பகுதிகளில் ஆவணப் பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்குத் தேவையான படிவங்கள் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு கணினி மூலமாகவே அனுப்பப்படும். இதனால் கால தாமதம் தவிர்க்கப்படுவதுடன், பட்டா மாறுதல் பணியும் விரைவில் நடைபெறும் 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு பட்டா பெறுவதற்கான வழிமுறையை எளிதாக்கியுள்ளதாக தெரிகிறது.

 

 

 

English Summary

Patta Transfer : New software expansion program launched ..!

Latest Articles

KOLNews