பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகம் முழுவதும் மதப் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வரும் பால் தினகரன், தனது. தந்தை டி.ஜி.எஸ்.தினகரன் வழியில், மத போதனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் மீது மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் கோவையில் காருண்யா பல்கலைக் கழகம் என மொத்தம் 28 இடங்களில் வரிமான வரித்துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா ? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
English Summary
Paul Dinakaran in trouble ..! - Income tax raid in 28 places ..!