KOLNews

மாலை நேரத்திற்கு ஏற்ற..வேர்க்கடலை சாலட்..!

மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா என போட்டு தாக்கும் பலரை பார்த்திருப்போம். அவர்களால் மாலையில் ஏதும் கொரிக்காமல் அல்லது சிறுதீனி சாப்பிடாமல் இருக்க முடியாது. விளைவு உடல் பெருக்கம் . இது போன்ற உடல்நல குறைகளை ஏற்படுத்தாத ஒரு மாலை சிறுதீனி, வேர்க்கடலை சாலட்..!

எளிதாக செய்யக்கூடிய இதற்கு தேவையான பொருள்கள் : தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப்,  பச்சைமிளகாய் - 2,  பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,  எலுமிச்சைச்சாறு - இரண்டு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக்கலக்கவும். மேலாகக் கொத்தமல்லித் தழையைத் தூவினால்,

வேர்க்கடலை சாலட் ரெடி வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.

பயன்கள் :

இதில் கலோரி அதிகமாக உள்ளது. 100கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள மனோ

அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் இ. தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளன.கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

English Summary

Peanut salad for the evening ..!

Latest Articles

KOLNews