கடந்த 25-ம் தேதி முதல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜோதிபூர் போன்ற பகுதிகளில் பறவைக்காய்ச்சலால் காகங்கள் உயிரிழக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்த நிலையில், உயிரிழந்த காகங்களில் உடலில் வீரியமிக்க வைரஸ் கண்டறியப்பட்டன.
அதையடுத்து,அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் உயிரிழந்த காகங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணிதீவீரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்த காகங்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தானைத் தொடர்ந்து, கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த வாரம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் உயிரிழந்து கிடந்தன. இறந்துகிடந்த வாத்துகளின் மாதிரிகளை சோதித்ததில், பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இதுவரை, 12 ஆயிரம் வாத்துகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பரவலை கட்டுப்படுத்த 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பறவை காய்ச்சல் குறித்த பீதி மக்களிடையே அதிகரித்துள்ளது.
English Summary
People beware ..! - Bird flu in the state next .!