KOLNews

தமிழ்நாட்டில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவீதம்..? - அதிர்ச்சி தகவல்

தேசிய குடும்ப நல ஆய்வு, தமிழ்நாட்டில் 38.1% பெண்கள் தங்களது கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது.

அதே போல, இந்தியாவின் பிற மாநிலங்களான  கர்நாடகாவில் 44.4%, தெலுங்கானாவில் 36.9%, ஆந்திர பிரதேசத்தில் 30%, கேரளாவில் 9% பெண்கள் தங்களது கணவரால் உடல் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். அதேசமயம் பஞ்சாபில் 11.6%, மகாராஷ்டிராவில் 25.2%, டெல்லியில் 22.6%, மேற்கு வங்கத்தில் 27% பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அதாவது  கடந்த 2020 ஆம் ஆண்டு,  ஜனவரி மாதம் 6 ந் தேதி முதல் மார்ச் மாதம் 21 ந் தேதி வரையிலும் பிறகு ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ந் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ந் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வினை  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளி (School of Public Health) ஆய்வு மேற்கொண்டது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 27,929 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  25,650 பெண்கள் மற்றும் 3,372 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 18 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் 38.1% பேர் தங்களது கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவந்துள்ளது.

இதில் அதிகம், ஆண்கள் மது அருந்துவதால்தான் பெரும்பாலான பெண்களுக்கு இந்த நிலை, என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதே போல, இந்த அய்வு கொரோனா ஊரடங்கிற்கு முன்பும் தளர்வுக்குப் பின்பும் நடத்தப்பட்டதால் இதற்கு ஊரடங்கு ஒரு காரணமாக இருக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

English Summary

Percentage of women victims of domestic violence in Tamil Nadu ..? - Shocking information

Latest Articles

KOLNews