KOLNews

வாகனங்களில் தலைவர்கள் படம் .. ! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க சென்னை மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.. 

அதில், வழக்கறிஞர்கள் 50 % வாகனங்களில் ' வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டுவதாக சுட்டிக்காட்டி இருப்பதுடன் , அவர்கள் இதனை கொண்டு  சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருதார் .

இந்நிலையில், இன்று இந்த வழக்கு  விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் , வாகனங்களில் புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் 60 நாள்களுக்குள் நீக்க வேண்டும் . அதுபோன்று வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் , கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் . மற்ற நேரங்களில் வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . 

English Summary

Picture of leaders in vehicles ..! - Court Order

Latest Articles

KOLNews