KOLNews

75 சதவீத பயணிகளுடன்... இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்பட 5 இடங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முன்னதாக இது குறித்து  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து நூறு பேருந்துகளுடன் சேர்த்து 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,  இன்று முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்படும். 

சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளில் பயணதிற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 சிறப்பு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

English Summary

Pongal special buses with 75% passengers from today ..!

Latest Articles

KOLNews