KOLNews

சிற்றின்பத்தை சிலாகித்து இளம்பெண் பேசிய ஆபாச பேச்சு..! - பேட்டி எடுத்த யூ டியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது..!

சென்னையில் Chennai Talk என்னும் யூ டியூப் சேனல், பெண்களின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியிலேயே அவர்களிடம்  பேட்டி எடுத்து ஒளிபரப்பியதையடுத்து, அந்த சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், சர்ச்சைக்குரிய யூ டியூப் சேனலும் முடக்கப்பட்டது.

அண்மையில், சென்னையில் பெண் ஒருவர் புதுவருட கொண்டாட்டத்தையொட்டி தான் எது போன்ற மகிழ்ச்சியை அடைய விரும்புவதாக சம்பத்தப்பட்ட   Chennai Talk என்ற யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி  ஒளிபரப்பாகனது, அத்துடன் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்ததன்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக்‍ யூ டியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.அத்துடன்,  பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பெண்களை அவமதிக்‍கும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டனர்.

English Summary

Pornographic speech by a young woman .! - 3 people from the YouTube channel have been arrested ..!

Latest Articles

KOLNews