KOLNews

பிரதமரிடமிருந்து..தமிழக டி.ஜி.பி.க்கு கிடைத்த பாராட்டு..!

சமீபத்தில்  உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் பிரதமர் மோடி தனியாக பேசியதோடு புகைப்படமும் எடுத்து கொண்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக, "நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீர்களே. அதை சமூக வலைதளங்களில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள்", என பிரதமர் மோடி, சைலேந்திர பாபுவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது 

Sylendra Babu IPS - வாழ்க்கை ஒரு சைக்கிள் போன்றது; நாம் மிதிக்கும் வரை அது  நகரும். Life is like a cycle; as long as we pedal it will roll. | Facebook

இந்த சந்திப்பின் போது,  சைலேந்திர பாபு, பிரதமரிடம் 15 பக்க அறிக்கையை அளித்துள்ளார். தமிழக அரசின் சார்பாக அளிக்கப்பட்ட இவ்வறிக்கையில், தமிழகத்தில் கலவரம், மதமாற்றம், சிலை திருட்டு, சமூக வலைதளங்களின் போக்கு, சைபர் குற்றங்கள், சிறுமியர் மீது பாலியல் குற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

English Summary

Praise received from the Prime Minister..Tamil Nadu DGP ..!

Latest Articles

KOLNews