தமிழகத்தை சேர்ந்த வட மாவட்டங்களில் உள்ள மக்கள், தென் மாவட்டங்களை போல் ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்கலில் ஈடுபட வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவர்கள் தங்கள் கொண்டாட்டத்தை காணும் பொங்கலன்று சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். குடும்பத்துடன் வெளியில் சென்று உறவினர், நண்பர்கள் ஆகியோரை சந்திப்பது, அவர்களுடன் பூங்கா, கடற்கரை என சுற்றி மகிழ்வது என்பதை பல ஆண்டுகளாக கடைபிடித்துவருகின்றனர். இந்த கலாச்சாரம், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதன் புற நகர்களில் வந்து வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களையும் பற்றிக்கொண்டுள்ளது. ஆகவே சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் நிரம்பி வழிவது போங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
இந்நிலையில், இந்த வருடம், கொரோனா அதற்கும் ஆப்பு வைத்து விட்டது.ஆமாம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடற்கரை மற்றும் பூங்காக்களில் வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் 15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Public is not allowed on the beach and in the parks for 3 days ..!