KOLNews

அதை கீழே வையுங்கள்..! - நீங்கள் சாதிக்கலாம்

மாணவர்களுக்கு செயல்முறை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஒரு பேராசிரியர், ஒரு க்ளாஸை கையில் தூக்கிப் பிடித்து மாணவர்களிடம் கேட்டார்.

‘இந்த க்ளாஸ் என்ன எடை இருக்கும்?’

‘50 கிராம், 100 கிராம்’ என்று பல மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பதிலை சொன்னார்கள்.

இந்த க்ளாஸ் என்ன எடை என்று எனக்கும் தெரியாது. ஆனால் நான் இதைத் தூக்கிச் சில நிமிடங்கள் பிடித்துக்கொண்டு இருந்தால் என்னாகும்?’

‘ஒன்றுமாகாது’

‘சரி,ஆனால் இதை நான் ஒரு மணிநேரம் தூக்கி பிடித்துக் கொண்டிருந்தால்?’

‘உங்கள் கை வலிக்க ஆரம்பிக்கும் சார்’ என்றார் ஒரு மாணவர் 

‘ரொம்பச் சரி, நான் இதை இப்படியே ஒரு நாள் பூரா தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் ?’

‘கை மரத்துப்போகும். தசை வலிப்பு வரலாம். ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிவரும் சார்’.

மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

‘ஓகே. ஆனால் இவ்வளவு நேரத்தில் இந்த க்ளாஸின் எடை கூடியிருக்குமா?’

‘இல்லை சார், கூடாது’

‘அப்படீன்னா, என் கை ஏன் வலிக்கும்? ஏன் மரத்துப் போகும்? நான் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நிலை ஏன் வருகிறது?

மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

‘சரி,இந்த வழியில் இருந்து வெளியில் வர நான் என்ன செய்ய வேண்டும்?’

‘க்ளாஸைக் கீழே வைக்கணும் சார்’என்றார் ஒரு மாணவர்.

‘ரொம்பச் சரி. வாழ்க்கையின் பிரச்சனைகளும் இப்படிதான். தலையில் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தால் வலிக்க ஆரம்பிக்கும். பின்பு அசைவற்று ஆகிவிடுவீர்கள். வேறு எதுவுமே செய்ய முடியாது. வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பது ரொம்ப முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் நாளின் முடிவில் அதைக் கீழே வைத்து விட்டு, மறந்துவிட்டு உறங்கப் போவதுதான். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன், புதிதாக எழலாம்.’

.வாழ்க்கையில் வெற்றி பெற, தற்காலிகமான பிரச்சனைகளினால்  மன இறுக்கத்துக்கு ஆளாகாமல்  ரிலாக்ஸ்டாக இருந்து வெற்றி பெறுங்கள்.

English Summary

Put it down ..! - You can achieve

Latest Articles

KOLNews