KOLNews

வெயிலுக்கு ஏற்ற ..முள்ளங்கி பொரியல்..!

கொளுத்தும் வெயிலுக்கு உணவில் குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் முள்ளங்கி சிறந்த ஒன்று. அதனை சாம்பாரில் சேர்த்து கொள்ளலாம். அல்லது கீழே சொல்லப்பட்டிருப்பது போல் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.  

முள்ளங்கி பொரியல்

தேவையான பொருட்கள் (இரண்டு நபர்களுக்கு) - முள்ளங்கி - 200 கிராம், வெங்காயம் - 25 கிராம், தேங்காய் துருவல் - 5 கிராம்,  பொட்டுக்கடலை - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 2,  கடுகு - 3 கிராம்,  உளுந்து - 3 கிராம்,

எண்ணெய் - 5 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - 5 கிராம்,  உப்பு - சிறிதளவு.

செய்முறை :

முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை தனித்தனியே பொடியாக நறுக்கவும். பொட்டுக் கடலையை பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய் போடவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, முள்ளங்கியை கொட்டி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், உப்பு, கால்கப் தண்ணீர்விட்டு வேகவிடவும்.

காய்வெந்து நீர்வற்றும் சமயம் பொட்டுக்கடலை பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

இதில் கிடைக்கும் மொத்த கலோரி - 175. ஒருவருக்கு கிடைக்கும் கலோரி - 87.5

 

 

 

English Summary

Radish poriyal for sunny days

Latest Articles

KOLNews