KOLNews

மழை ..! - என்ன சொல்கிறது வானிலை மையம்..?

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவரமடைந்துள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதன் காரணமாக தென்மேற்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிக அளவில் மழை பெய்யுமென்றும்,  கோவை தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல,சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திண்டுக்கல் வேலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

 

English Summary

Rain ..! - What does the weather center say?

Latest Articles

KOLNews