KOLNews

சென்னையில் மழை தொடரவே வாய்ப்பு.!

சென்னை வானிலை ஆய்வு மையம்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் வடமாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும்  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 19ம் தேதி வரை ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக மீன்வர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Rain is likely to continue in Chennai.!

Latest Articles

KOLNews