தனது பொன்விழாவை கொண்டாடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிறப்பு தள்ளுபடி விலையில் அந்நிறுவனத்தின் அரிய நூல்களை விற்பனை செய்துவருகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :– உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா (1970–2020) ஆண்டை முன்னிட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகிய பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அகராதி, அரிய நூல்கள், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும், டிசம்பர் மாதம் முழுவதும் 30 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
நூல் விற்பனை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். இணைய வழியிலும் தொகை செலுத்தி நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரியை நேரிலோ அல்லது 044 22542992, 044 22540087 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகலாம்.
என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Rare books of the World Tamil Research Institute at a special discount!