KOLNews

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..!

வரும், 27-ந்தேதி விடுதலையாக உள்ள நிலையில் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அத்துடன், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் அவருக்கு முதல் கட்டமாக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

அதன் பின், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தண்டனை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால் மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டு வருவதாகவும், எனவே அதற்காக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில்  தற்போது  மூச்சுத்திணறல் மீண்டும் ஏற்பட்டதன் காரணமாக அவசரசிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற 27-ந் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

Sasikala admitted to ICU

Latest Articles

KOLNews