KOLNews

சசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு..! - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..!

பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

தொடர்ந்து நான்காண்டு கால சிறை வாசத்திலிருந்து வரும் 27ஆம் தேதி செய்தி கட்சிகளாக உள்ள நிலையில் திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  அங்கு சர்க்கரை தைராய்டு காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .

அத்துடன், சசிகலாவுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும், . கொரோனா ஆன்டிஜென், ராபிட் கிட் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து சசிகலா செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. .

இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவர் மனோஜ் கூறுகையில், சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு 79% இருந்ததால் தற்போது ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் .சிகிச்சைக்கு பின் சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் . அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், ரேபிட் பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும் ஆர்.டி.பி.சி.ஆர். முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார் மருத்துவர் மனோஜ். 

English Summary

Sasikala suddenly falls ill ..! - improved after treatment ..!

Latest Articles

KOLNews