KOLNews

உறவு மெய்ப்பட வேண்டுமா..? - ஆரம்பத்தில் அவசரம் வேண்டாம்..!

நவீன யுகத்தில் டேட்டிங் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதிலும் தங்களது முதல் சந்திப்பிலேயே மொத்தத்தை யும் பார்த்துவிடுவது என்ற ஆர்வ கோளாறில் செக்ஸ் வைத்துக்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் இது தவறு என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Image result for girl removing her shirt before boy

ஆணும் பெண்ணும் முதல் டேட்டிங்கின் போது , அந்த  நாளை நன்றாக பேசி புரிந்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏற்கனவே போனிலும், இணையதளம் வாயிலாகவும் பேசியிருந்தாலும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது கூட ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.

மேலும், ஆரம்பத்திலேயே  உடல்ரீதியான உறவு ஏற்பட்டு விட்டால் அடுத்த நடவடிக்கைகள் எல்லாமே அதைப்பற்றிய சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்கும். தவிர, இதனால் தேவையற்ற குற்றஉணர்வுகளுக்கு ஆளாக நேரிடும்.

Image result for dreaming about love

அதுவே காதலர்கள் தனியாக சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே செக்ஸ் பற்றிய பேச்சோ, செயல்பாடுகளோ இருவருக்கும் இடையேயான நன்மதிப்பை குலைத்துவிடும். குறிப்பாக இந்திய ஆண்களில் பலர்,  அனுபவிக்கும்போது அனுபவித்துவிட்டு , எடுத்தவுடனே சம்மதித்துவிட்டாளே, ஏற்கனவே ருசி கண்டவளாயிருப்பாளோ என்கிற சந்தேக கண்ணுடன் அந்த பெண்ணை பார்க்க வாய்ப்பு உள்ளது. மேலும் எடுத்தவுடன் செக்ஸுக்கு சம்மதிக்காத பெண்ணின் மீது ஆணுக்கு ஒரு நன்மதிப்பு வரும்.

சில பல சந்திப்புகளுக்கு பின், நான் உன்னுடையவள் என்கிற எண்ணத்தை ஆணின் மனதில் பதியவைத்துவிட்டு, அவன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துப்போவதே நெடுங்கால உறவுக்கு ஏற்றது.

English Summary

Should the relationship be realized ..? - Don't rush early!

Latest Articles

KOLNews