KOLNews

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை மிக மோசமடைந்தது..!

கொரோன தொற்றுக்கு உள்ளாகி, பின் அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை, நேற்றிலிருந்து மிகவும் மோசமடைந்து இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எஸ்பிபியின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் எஸ்பிபி சரண் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பதிவில், விரைவில் அவர் வீடு திரும்புவதற்காக சூழலை எதிர் நோக்கி காத்து இருக்கிறார் என்று அ குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நல்ல முன்னேற்றத்துடன் அவர் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார் இந்த சூழ்நிலையில்தான் எஸ்பிபி னுடைய உடல்நிலை மிகமிக மோசமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது  எக்மோ கருவி மற்றும் பிற உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து அவருடைய உடல் நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

English Summary

Singer S.P. Balasubramaniam's condition worsened ..!

Latest Articles

KOLNews