KOLNews

பாடகர் எஸ்பிபி க்கு நினைவு திரும்பியது..!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரானா  நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். 

அண்மையில் அவரது உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்து, பின் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறார். சுயநினைவின்றி இருந்த அவருக்கு அவ்வப்போது நினைவு வந்து போவதாக இருந்தது. 

இந்நிலையில் அவருக்கு தற்போது முழுமையாக நினைவு திரும்பி உள்ளதாகவும், இயன்முறை சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைப்பதாகவும், நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.. 

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியதிற்கு  வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் ஐ சி பிரிவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பி இருக்கிறது. பிறர் பேசுவதை உணர்ந்து பதிலளிக்கிறார். இயன்முறை சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். மருத்துவ குழுவினர் எஸ் பி பி யின் உடல் நிலையியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. 

 மருத்துவமனையின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English Summary

Singer SPB's memory returned ..!

Latest Articles

KOLNews