KOLNews

மாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..! - அரசாணை வெளியீடு.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், அரசு அலுவலங்கங்களின் செயல்பாட்டிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தியது. 50 சத பணியாளர்களுடன் இயங்கும் சூழல் ஏற்பட்டது. அதன் பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் படிப்படியாக பணியாளர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. 

இந்நிலையில் புதிய அறிவிப்பாக ஜனவரி 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா காலத்தில்  மூடிக் கிடந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் கொரோனா  தோற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் ஜனவரி 1 முதல் 100 சதவிகித ஊழியர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary

State Government Offices run only 5 days a week ..! - Government Order

Latest Articles

KOLNews