KOLNews

மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு ! - 400 மாணவர்களுக்கும் அக்கறை காட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழக சட்டசபையில், மருத்துவ படிப்பு பயில எதுவாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்  கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருந்து வருகிறார் 

இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், “சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால், நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும். என தெரிவித்துள்ளனர் .

அத்துடன், இவ்விவகாரத்தில் வரும் திங்களன்று நல்ல முடிவு வரும் என்று நம்புவதாகவும் ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை, ஆனாலும், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுகிறது” என்றும்  அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary

Sub-reservation in medical study! - High Court caring for 400 students

Latest Articles

KOLNews