KOLNews

சூப்பரான ..சுறா மீன் பொரியல்..!

அசைவ உணவில் அதிக வகையான சைடு டிஷ்களை செய்ய ஏற்றது மீன். அதில் சுறா மீன் பொரியல் அட்டகாசமான ஒன்று. அதை எப்படி செய்வது என பார்ப்போம்..

தேவையான பொருட்கள் - 

சுறாமீன்1 கிலோ, வெங்காயம் - 5. பூண்டு, இஞ்சி விழுது - ஒன்றரை டீஸ்பூன்,  பச்சைமிளகாய் - 4, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை -

மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். மீன் நன்றாக வெந்தவுடன் எடுத்து தோலை

நீக்கி உதிரி ஆக்கி உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதக்கி உதிரியாகியப் பின் வேக வைத்த மீன் கலவையை கொட்டி நன்றாக கிளறவும். (மிதமான தீயில் வைக்கவும்) முறுகலாக வெந்தபின் இறக்கவும்.

 

 

English Summary

Superb ..Shark fish fry ..!

Latest Articles

KOLNews