KOLNews

ஸ்வீட் சென்னா சாண்ட்விச்..! - 'பயப்படாதீங்க' வெய்ட் போடாது..!

உடல் பருமனை குறைப்பவர்கள், உணவை தவிர்த்து மாலை நேர நொறுக்கு தீனிகளை குறைக்க வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. அது உண்மை தான் என்றாலும் கூட , அதில் பழக்கப்பட்டவர்களுக்கு எல்லா நாட்களிலும் அதை கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அவர்களை போன்றவர்கள் மாலை நேரங்களில் உட்கொள்ள  உகந்தது "ஸ்வீட் சென்னா சாண்ட்விச்"..! .  அதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு) -

வேக வைத்த சென்னா - 50 கிராம்,  வெங்காயம் - 50 கிராம்,  தக்காளி - 25 கிராம்,  மிளகாய்தூள் - 3 கிராம், கரம்மசாலா - 3 கிராம்,  வெல்லம் - 20 கிராம்,  உப்பு - 2 சிட்டிகை,  எண்ணெய் -5 கிராம், சாண்ட்விச் பிரட் - 8.

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை குழையும் வரை வதக்கி, மிளகாய்தூள் கரம்மசாலா, சிறிது உப்பு சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்விட்டு சிறுதணலில் மூடிவிடவும். நீர்வற்றும் சமயம் சென்னா, பொடித்த வெல்லம் போட்டு கிளறி, வெல்லம் கரைந்ததும் இறக்கவும். பின்னர் பிரட்டை தவாவில் போட்டு இலேசாக சூடுபடுத்திவிட்டு சென்னா ஸ்வீட் மசாலாவை வைத்து சாப்பிட பரிமாறவும்.

இதில் கிடைக்கும் கலோரிகள் - 588.

ஒருவருக்கு கிடைக்கும் கலோரி - 147.

English Summary

Sweet Chenna Sandwich ..! - 'Don't fear..No rise in weight .!

Latest Articles

KOLNews