KOLNews

தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..! - பிறந்த நாளில் இறந்த கொடுமை ..!

திமுக நிர்வாகியும், ஊடகங்களில் திமுக சார்பில் பேசும் பேச்சாளருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,, சென்னை கொடுங்கையூர் பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

வழக்கறிஞராகவும் உள்ள தமிழன் பிரசன்னாவுக்கு நதியா (வயது 35) என்கிற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன. சென்னை எருக்கஞ்சேரி, இந்திரா நகரில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார் தமிழன் பிரசன்னா. 

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நதியாவிற்கு இன்று பிறந்தநாள் என்றும், பிறந்தநாளை கொண்டாடி அதனை முகநூலில் பதிவேற்ற நதியா விரும்பியதாகவும், கொரோனா காலத்தில் இப்படி செய்ய வேண்டாம், என்றும் அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடலாம் என தான் கூறியதாகவும், அதனால் மனஉளைச்சலில் இருந்ததாகவும், தமிழன் பிரசன்னா  போலீசில் கூறியுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் காலையில் நதியா இருந்த அறை திறக்கப்படாத நிலையில்,சுமார் 10 மணியளவில் தமிழன் பிரசன்னா கதவையுடைத்து பார்த்தபோது, அங்கு நதியா மின்விசிறியில் தூக்கிட்டு இருந்துள்ளார். 

இதற்கிடையே தமிழன் பிரசன்னாவின் மாமனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். 

English Summary

Tamil Prasanna's wife commits suicide by hanging ..! - Death on birthday ..!

Latest Articles

KOLNews