KOLNews

தமிழகத்தை 'அசைத்து' விடலாம் ..! - சர்ச்சைக்குள்ளாகும் போதகர் லாசரஸ் பேச்சு..!

கட்டாய மதமாற்றம் சட்ட விரோரோதமானது என்கிற நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே சிலர் செய்யும் துண்டு நோட்டீஸ் பிரச்சாரங்களினால் பிரச்சனைகள் உருவாவதை சில காணொளிகள் மூலம் சமூக வலை தளங்களில் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது பிரபல கிருஸ்துவ போதகர் லசாரஸ் மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் வகையில் பேசியதாக ஒரு காணொளி வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர், ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட அந்த வீடியோவில்,  "பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. 60 லட்சம் விசுவாசிகள் இருக்கின்றனர். 2020 ல் ஒரு விசுவாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், அடுத்த வருடம் 1.20 கோடி மக்கள். அதற்கடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என 3 வருடத்தில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசினார்" என பேசியுள்ளார் போதகர் லசாரஸ்.

இந்நிலையில் இதை, அவர் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக  தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என சமூகவலைத்தளங்களில் மாற்று கருத்துடையோர் பதிவிட்டு வருகின்றனர். 

English Summary

Tamilnadu can be shaken .. - Pastor Lazarus talk in controversy ..!

Latest Articles

KOLNews