KOLNews

புதிய அரசு பணியிடங்கள் உருவாக்க தமிழக அரசு தடை ..! - சிக்கன நடவடிக்கையா..?

என்ன தான் தனியார் துறை வளர்ச்சி அடைந்தாலும், பணி பாதுகாப்பு என்கிற ஒரு அம்சத்தாலேயே மக்களுக்கு அரசு பணி மீது தொடர்ந்து ஈர்ப்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில், கொரானா தொற்று தாக்கத்தால் அதிலும் சிக்கல் வந்துள்ளது. 

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், பணி உயர்வு மற்றும் பணி இடமாறுதலால் ஏற்படும் பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கருணை அடிப்படையிலான தொடக்க நிலை பணியிடங்களை நிரப்பவும் தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை செய்து வருகிறது. நிதிநிலையை சீராக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவினங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு விருந்துகள், அலுவல் தொடர்பான விமான பயணங்கள் போன்றவற்றில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்திருக்கிறது.

English Summary

Tamilnadu government bans new govt .. - Austerity?

Latest Articles

KOLNews