KOLNews

வரி என்பது நன்கொடையல்ல.. பங்களிப்பு..! - நடிகர் விஜய்க்கு கோர்ட் அறிவுரை

நடிகர் விஜய், 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து  ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்த நிலையில் . அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது . 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ . 1 லட்சம் அபராதம் விதித்து,  அதனை முதல் - அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டது . 

மேலும், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், என்றும், அவர்கள்  ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல ; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு . சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  கண்டனம் தெரிவித்தது நீதிமன்றம்.

English Summary

Tax is not a donation .. contribution ..! - Court advice to actor Vijay

Latest Articles

KOLNews