KOLNews

தமிழகத்தில் கோயில்கள்..! - உயர்நீதிமன்றம் பிறப்பித்த அடுக்கடுக்கான உத்தரவுகள்..!

கடந்த 2015 ம் ஆண்டு, புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது . இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது , தமிழகம் முழுவதும்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  புராதன கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என்றும், கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், கோயில்களின் பட்டியலை தயாரித்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் . கோயில்களில் உள்ள சிலைகள் , நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கோவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொளவது தொடர்பாக மாநில , மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் சிலைகள் நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் ஆக்கிரமிப்பில் உள்ள நியாங்களை மீட்பதுடன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிரணயிக்க வேண்டும் என வலியுறுதியுள்ள  உயர்நிதி மன்றம் இவ்வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

English Summary

Temples in Tamil Nadu ..! - Layer orders issued by the High Court ..!

Latest Articles

KOLNews