KOLNews

எப்படியெல்லாம் வாழணுமுன்னு நெனைச்சேன்..! புலம்பாதீங்க .வழி இருக்கு

நீங்கள் திட்டமிட்ட வாழ்க்கை வாழமுடியவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு இருந்தால், அதை மாற்ற கீழ்கண்டவற்றை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

1. உங்களை போல  உள்ளவர்கள் எதன்னை பேர் இருக்கிறார்கள் என நண்பர்கள், சுற்றத்தார் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது கொஞ்சம் கவுரவ குறைச்சலாக தெரியும் பட்சத்தில் வலைத்தளத்தில் தேடுங்கள். அப்போது தெரியும் உங்களை போல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று.,அதை ஒரு ஆறுதலாக எடுத்து கொள்ள வேண்டாம், ஆனால் அவர்கள் யாரும் அழிந்து விட போவதில்லை, அவர்களும் தங்கள் அடுத்த நகர்வை நோக்கி முன்னேற முயல்வதை பார்த்து உங்களை மாற்றி கொள்ள முயலலாம்.

வாழ்க்கை திட்டமிட்டபடி செல்லாதபோது, சுய பரிதாபத்திற்கு ஆளாக அனுமதிக்க கூடாது.

Adlerian Therapy: A method to overcome inferiority complex - The ...

2. துரதிர்ஷ்டம் பொதுவானது.

நீங்கள் திட்டமிட்ட வாழ்க்கை, உங்கள் பார்வையில் படும் ஒருவருக்கு திட்டமிடாமலேயே அமைந்திருக்கலாம்.அதனால் நீங்கள் பொறாமை பட கூடாது. அருகில் சென்று கேட்டு பார்த்தால், பெரும்பாலும் அதில் அவருக்கு பெரிய மகிழ்ச்சி இருக்காது. ஏன் எனில் அவர் திட்டமிட்டது வேறு வாழ்க்கையாக இருக்கும்.  யதார்த்தை எதிர்கொள்ளவது என்பது மனசமாதானம் செய்து கொள்வதல்ல.. எதையும் என்னால் மாற்றி கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அது.

3. முதலில் நீங்கள் மாறுங்கள் 

Male Mirror Reflection Showing Condom, Stock Footage Video (100 ...

திட்டமிட்டது ஏன் நடக்கவில்லை என ஆராய்வதை விட்டுவிட்டு . நீங்கள் திட்டமிட்டதற்கும், மற்றவர் உங்களை பற்றி வைத்திருக்கும் பிம்பமும் ஒத்துபோகிறதா என பாருங்கள். அதில் சிக்கல் இருந்தால். உங்கள் திறன்களை மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள். அது குறிப்பிட்ட சிலரிடம்  பலன் இல்லாமல் போகலாம். ஆனால் உங்களின் தேவை உள்ளவர்கள் உங்களை கண்டிப்பாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

4. நடைமுறை சாத்தியமில்லாதவற்றை இலக்காக வைத்திருக்காதீர்கள்.

Is Inferiority Complex Linked to Social Anxiety?

நாம் எல்லோரும்  நிறைவேறாத கனவுகளைக் கொண்டுள்ளோம், வெறும் மோகத்தின் அடிப்படையிலேயே ஒன்றை நோக்கி சென்று கொண்டிருப்பது கால விரயத்தை கொடுக்கலாம். அல்லது அதை சாதிக்க போதுமான சிறிய வெற்றிகளை உருவாக்குங்கள். உங்களின் இலக்கு சாத்தியம் தான் என்பதை இந்த உலகம் ஒத்துக்கொள்ள ஒரு சில சிறிய வெற்றிகள் அவசியம். 

5. உங்கள் வாழ்க்கையை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, இப்போது நீங்கள் விரும்பும் காரியங்களைச் செய்யுங்கள்.

8 Principles To Consider Before Leaving A Church You (Used To ...

ஆமாம், உங்கள் வாழ்க்கை இந்த பிரபஞ்சத்திற்கு அவ்வளவு முக்கியமல்ல . உண்மையிலேயே உங்கள் வாழ்க்கை மீது அக்கறை கொண்ட ஒரே நபர் நீங்கள் தான் என்பதை உணருங்கள் . வெற்றி பெற இன்னும் பல கதவுகள் உள்ளன. நீங்கள் காத்திருக்க எந்த காரணமும் இல்லை. வாழ்க்கை எனும் நாடகத்தின் வெறும் பார்வையாளன் அல்ல நீங்கள்.. மேடை எற தயாராகுங்கள்.

English Summary

The life I want to live..! - Way is there.

Latest Articles

KOLNews