KOLNews

கீழடியின் பெருமை..! - சீன மாணவர்கள் ஆர்வம் ..!

உலகின் மூத்த குடி தமிழர்கள் என்பதற்கு வலுவூட்டக்கூடிய வகையில் கீழடி ஆய்வு தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிலையில், இது தொடர்பாக, சீனாவில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இது தொடர்பான புகைப்படங்கள் , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன . தமிழகத்தின் தென் மாவட்டமான சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றும் வரும் அகழாய்வின் மூலம் , 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில்,  அங்கு கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துகள் , உறை கிணறு , ஆபரணங்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியில் ஆதாரங்கள் அமைந்துள்ளன.

Keezhadi excavation opens a pandora's box in tn politics - DTNext.in

இந்நிலையில்,  சீனாவில் உள்ள யுன்னன் மிஞரு பல்கலை கழகத்தில் , தமிழ்துறை மாணவர்களுக்கு , கீழடி ஆய்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிக்கி ஜாக , பாடம் எடுத்ததை , தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் . ஏற்கனவே இவர் , சில ஆண்டுகளுக்கு முன் , கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

The pride of the Keezhadi ..! - Chinese students interested ..!

Latest Articles

KOLNews