KOLNews

வீடியோவால் வந்த வம்பு..! - நித்யானந்தா மீது புதிய வழக்கு ..!

சேலம், முற்பிறவியில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலை தான் கட்டியதாகவும் , மேலும் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில் , மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது.

இந்நிலையில், இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளதால், அவரிடம் இருந்து அந்த மூல லிங்கத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, அவரது புகாரின் பேரில் நேற்று சாமியார் நித்யானந்தா மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English Summary

The video .. New case against Nithyananda

Latest Articles

KOLNews