வேலைவாய்ப்பின்மை இப்படியும் ஒருவரை சிந்திக்க வைத்து விடுமா,,? என நம்பமுடியாத வகையில் வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகர்கோவிலையடுத்த எள்ளுவிளையைச் சேர்ந்த செல்லசுவாமி மகன் நவீன், (வயது 32) .இன்ஜினியரிங் படித்த இவர், வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று 15 நாட்களுக்கு முன்பு தான், மும்பையிலுள்ள பாங்க் ஆப் இந்தியாவில், உதவி மேலாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, விமானத்தில் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். பின், வடசேரி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார்..
சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலைக்கு முன் நவீன் எழுதிய கடிதத்தில், 'நான் படித்து விட்டு, பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்தேன். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்க வில்லை. வேலை கிடைத்தால், உயிரை காணிக்கையாக தருவதாக கடவுளிடம் வேண்டினேன். 'வேலை கிடைத்ததால் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடம் செல்கிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.
English Summary
The young man who made his life a debt ..! - Suicide with head on railroad tracks