KOLNews

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் முக்கிய காரணம்..! - காவல்துறை தகவல்

சென்னை, கோட்டூர்புரத்தில் வசித்து வந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 8-ந்தேதி இரவு, படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிந்ததே..

இந்நிலையில்,  நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நிறைவடைந்ததையடுத்து நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகையின் தற்கொலை  தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை  குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது- 

நடிகை சித்ரா கலந்துகொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கு ஹேம்நாத் சென்று அவரிடம் தகராறு செய்து வந்ததாகவும்.  மேலும் குடித்துவிட்டு அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஹேம்நாத்தை பிரிந்து வந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் கணவர் மறு புறம் தாயார், என  இருவர் மத்தியிலும் சிக்கி மனஅழுத்தத்திற்கு உள்ளான சித்ரா , அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

English Summary

This is the main reason for actress Chitra's suicide ..! - Police information

Latest Articles

KOLNews