KOLNews

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட..வெந்தயக்கீரை காரக் குழம்பு..!

வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட நாம் இளநீர், தர்பூஸ் போன்றவற்றில் உள்ள குளிர்ச்சியை மட்டுமல்ல, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கூட குளிர்ச்சியையை சேர்த்து கொள்ளலாம். அந்த வகையில் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. அதனை கொண்டு காரக் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு)

வெந்தயக்கீரை - 100 கிராம்,  புளிகரைசல் - 50 கிராம், வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 100 கிராம்,  கடலை பருப்பு - 5 கிராம் ,  உளுந்து - 5 கிராம்,  தனியா - 5 கிராம்,  மிளகாய் -,5 கிராம்  மிளகு - 5 கிராம், பூண்டு -5 கிராம், கடுகு - 3 கிராம், எண்ணெய் - 10 கிராம், கறிவேப்பிலை - 3 கிராம், உப்பு - தேவையான அளவு

The mighty sunshine

செய்முறை :-  கடலை பருப்பு, உளுந்து, மிளகாய், தனியா இவற்றை வாணலியில் சில துளிகள் எண்ணெய்விட்டு வறுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். புளிகரைசலுடன் தக்காளி, கறிவேப்பிலை பருப்பு

மிளகாய் பொடியை சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு பொன்னிறமானதும் ஆய்ந்துவைத்த கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு புளிகரைசலை ஊற்றி 20 நிமிடம் வரை சிறுதணலில் கொதிக்கவிட்டு புளிவாடை அடங்கி பதமானதும் இறக்கவும்.

இதில் கிடைக்கும் மொத்த கலோரி - 256., ஒருவருக்கு கிடைக்கும் கலோரி - 64.

 

 

English Summary

To get rid of the effects of the sun .Venthaya keerai kaara kuzhambu..! ..!

Latest Articles

KOLNews